கைக்குண்டுடன் இரு குழந்தைகளை பிணையக் கைதியாக்கியுள்ள தந்தை
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹங்வெல்ல ஜல்தர அரச ஊழியர் வீடமைப்பு வளாகத்தில் கைக்குண்டுடன் தனது பிள்ளைகளையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள நபரை தடுக்கும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைக் கொல்லும் நோக்கில் சந்தேக நபர் கைக்குண்டுடன் வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும் மனைவி வீட்டில் இருந்து குதித்து தப்பி உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது இரு குழந்தைகளையும் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு குழந்தைகளையும் மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.