அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்கவிருக்கும் ரஜினி
சூப்பர் ஸ்டார் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் படம்பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த படியாக ரஜினிகாந்த் எந்த இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில்(3.0), கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கதை ஒன்றை கேட்டுள்ளதாகவும் அதையும் உறுதி செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த மூன்று படங்களுக்கு பின் முருகதாஸின் இயக்கத்தில் மற்றுமெறு படத்தில் நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்தக் கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக சூப்பர் ஸ்டாரின் மார்க்கெட் தற்போது இருப்பதை விட இன்னும் இரண்டு மடங்கு உயரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்படினா அரசியல் என்பது வெறும் கனவு மட்டும் தானா, என புரியாமல் விழிபிதுங்கி உள்ளனர் ரசிகர்கள்.