வேகமாக பரவும் மர்ம நோய்… கொத்து கொத்தாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்கள்!
டெல்லியை ஒட்டியுள்ள காசியாபாத்தில் ஒருவர் பின் ஒருவராக மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடும் வயிற்று வலி, வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலரிடம் புகார் அளித்த நிலையில், அவர் இந்த விவகாரம் குறித்து மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 15 தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். தண்ணீர் பிரச்னை காரணமாக இந்த தொற்று பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய காசியாபாத் தலைமை மருத்துவ அதிகாரி, “சாயா கோல்ட் அவன்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளோம். அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் அதன் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அப்பகுதி மக்கள், “கடந்த சில நாட்களாக நிலமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, காலநிலை மாற்றம் மற்றும் வெப்பம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவதாக தாங்கள் உணர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் காரணமாகவே இந்த தொற்று பரவுவதாக சிலர் கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி வாசியான நிதின் கூறுகையில், “கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, தண்ணீருடன் கலந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அதன் காரணமாகவே இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெர்வித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அப்பகுதில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
மீண்டெழுந்துவிட்டது ஐ.தே.க.! – இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்கிறார் பாலித.
ரணிலுக்கு ஆதரவா? – இன்னும் முடிவில்லை என்கிறார் மஹிந்த.
விசா மோசடி மத்திய வங்கி மோசடியை விட பன்மடங்கு அதிகம்! – ஹக்கீம் தெரிவிப்பு.
நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!
புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி! – சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க.
புதிய சோதனையில் 6G வேகம் 100 Gbps ஐ எட்டியது : வேகம் சராசரி 5G செல்போன்களை விட 500 மடங்கு.
புடின் ஐந்தாவது முறையாக நேற்று பதவியேற்றார்!
ரணில் செல்லும் பாலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் NPP அரசாங்கமும் முன்னோக்கி செல்லும்..- அனுர.
அவசர அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர்! இதான் ஐபிஎல் ஸ்க்ரிப்ட்?