டயானாவின் MP பதவிக்கு முஜிபுர் நியமிக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய அந்த இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (8) டயானா கமகே, பிரித்தானியக் குடியுரிமை உள்ளதால், அரசியலமைப்பு ரீதியாக அவர் பதவி வகிக்க முடியாது என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டயானா கமகேவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என அறிவித்தது.
இதன்படி, வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் SJBடயினால் பரிந்துரைக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.