தோல்வியடைந்த பஞ்சாப் அணியின் ‘பிளே ஆப்’ வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஐந்து முறை சாம்பியன் மும்பை, முதல் அணியாக ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது. நேற்றுதர்மசாலாவில் நடந்த போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு கோலி, கேப்டன் டுபிளசி(9)ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கர்ரான் வீசிய 4வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தவில்ஜாக்ஸ் (12), கவேரப்பாவிடம் சரணடைந்தார்.21 பந்தில் அரைசதம் கடந்தபடிதர்,55ரன் எடுத்து நம்பிக்கை தந்தார்.
பெங்களூரு அணி 10 ஓவரில் 119/3 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்,கோலி அரைசதம் கடந்தார்.இவர்,92 ரன்னில் அவுட்டானார்.ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் (18), லாம்ரர் (0), கிரீன் (46) அவுட்டாகினர். பெங்களூரு அணி 20 ஓவரில்241/7ரன்எடுத்தது.
பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் (6), பேர்ஸ்டோவ் (27) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. வேகமாக ரன் சேர்த்த ரூசோவ், 27 பந்தில் 61 ரன் எடுத்தார். சஷாங்க் (37), ஜிதேஷ் (5), கர்ரான் (22), அஷுதோஷ் (8) நிலைக்கவில்லை. 17 ஓவரில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்த பஞ்சாப் அணியின் ‘பிளே ஆப்’ வாய்ப்பு முடிவுக்கு வந்தது.