தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!
காலி – அஹுங்கல்ல பகுதியில் நேற்று (10) குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 54 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பல தோட்டாக்கள் அவரது வயிற்றைத் துளைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.