இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை வித்தித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது.

ஏன் அரளி தடை செய்யப்பட்டது ?

கேரளாவில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, சூரியா சுரேந்திரன் என்கிற 24 வயது செவிலியர் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதற்கு காரணம் அரளி பூ என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

சூரியாவுக்கு லண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதன்படி அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி லண்டனுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் அழைப்பு வரவே, சூரியா போனில் பேசிக்கொடிருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார்.

அதன் பிறகு வாந்தி, மயக்கம் என சூரியாவின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

சூரியா உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம், தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்த பிறகு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ பயன்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை வாய்ந்தது என உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எரிந்த அரளி பூவின் புகையை சுவாசித்தால் கூட அது விஷமாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே கேரள அரசு கோயில்களில் அரளி பூக்களை பயன்படுத்த தடை வித்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

இந்தியத் தூதுவர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு!

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு சாவு! (படங்கள் – வீடியோ இணைப்பு)

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி தயாராம்! – வேட்பாளர் குறித்து இன்னமும் முடிவில்லை என்கிறார் பஸில்.

மொட்டுவின் வேட்பாளரே 9 ஆவது ஜனாதிபதி! – கட்சியின் செயலர் கூறுகின்றார்.

ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்கவே முடியாது! – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சொல்கின்றார்.

17 வயது மகளை கர்ப்பமாக்கிய 31 இளைஞன் , மகளை மணம் செய்ய மறுத்ததால் கொலை செய்தேன் : குளியாப்பிட்டிய கொலை குறித்த புதிய கதை.

ரெஜிஸ்டார் பதிவில் இல்லாத டயானாவின் ‘தென் கொழும்பு’ பிரிவில் பிறந்த போலிப் பிறப்பு சான்றிதழ்.

டெலிபோன் சின்னத்தை தொலைப்பாரா சஜித்? SJB சிக்கலில்… நீதிமன்றம் செல்லும் டயனாவின் கணவர் சேனக சில்வா.

கிரிப்டோ நாணயம் இலங்கையில் சட்டவிரோதமானது – மத்திய வங்கியின் ஆளுநர்.

மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சார வயர் உரசி பலியான தம்பதி..!

Leave A Reply

Your email address will not be published.