ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு.
ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா -உக்ரைன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர்.
இப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி. ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் , முயற்சித்தும் பலனில்லை எனவே போர் நீடிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், ராணுவ டாங்கிகள் ஆகியவையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.