ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லவிருக்கும் பாரிஸ் தமிழன்.
இலங்கையில் பிறந்து , புலம் பெயர்ந்து விருது பெற்ற பிரான்ஸ் பேக்கரி தயாரிப்பாளரான தர்ஷன் செல்வராஜ், பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் நிகழ்வுக்கான தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் சுடர் பாரிஸ் நகருக்கு கொண்டு வர 10,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட best baguette பேக்கரி விருது பெற்ற தர்ஷன் செல்வராஜ், ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற வரலாறு படைக்கிறார்.
அவர் 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் சிறந்த பேக்கரிக்கான சிறந்த பாகுட் விருதை (best baguette) வென்றபோது புகழ் பெற்றார்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த வெற்றிகளால் இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.