ரத்துபஸ் வழக்கில் முன்னாள் மேஜர் உட்பட 4 பேர் விடுதலை.

வெலிவேரிய நகரில் இரத்துபஸ் பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் உட்பட நான்கு சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று (17) விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா, ரத்துபஸ் பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் மாசடைந்துள்ளதாகக் கூறி, சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி கம்பஹாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அங்கு போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 1, 2013 அன்று நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 3000 எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் 289 இராணுவத்தினர் அதை கலைப்பதில் ஈடுபட்டனர். விசாரணையின் போது 65 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.