நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்
நாளை(ஞாயிறு) மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி., எல்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைதான நிலையில் விடியோ வெளியிட்டு அவர் கூறியதாவது, பிரதமர் மோடிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி., எல்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம். ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பிரதமர், முடிந்தால் எங்களது கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துக்கொள்ளட்டும்.
ஏற்கெனவே எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த அனைவரையும் சிறையில் அடைக்க முயல்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்களன்று முதல்வரை சந்திக்க அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்ற ஸ்வாதி மாலிவாலை, அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும், மார்பிலும் வயிற்றிலும் உதைத்ததாகவும், கன்னத்தில் பலமுறை அறைந்ததாகவும் மாலிவால் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி போலீஸார் கேஜரிவாலின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் பிபவ் குமாரை நேரில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பியது. இதனிடையே, வியாழனன்று ஸ்வாதி மாலிவாலின் இல்லத்திற்குச் சென்ற தில்லி காவல்துறை, அவரிடம் சுமார் 4 மணி நேரம் அங்கு நடந்தவை அனைத்தும் விசாரித்து எப்ஐஆர் பதிவு செய்தது. பின்னர், ஸ்வாதி மாலிவால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, கேஜரிவாலின் இல்லத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் தில்லி காவல்துறை ஆய்வு செய்தது. சாட்சியங்களின் முகாந்திரங்களை வைத்து கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
மேலதிக செய்திகள்
தம்மிகவின் மற்றுமொரு சிறந்த பணி – குருநாகலில் 3000 மில்லியன் பெறுமதியான கல்விச் சான்றிதழ்!
அநுரவுக்கு 50% ஆதரவு இப்போதே உள்ளது.. அவர் ஜனாதிபதி ஆவது 500% உறுதி.
உலக அளவில் மின்சார வாகன விற்பனை குறைந்துள்ளது.
5 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் , இருவர் விமான நிலையத்தில் கைது.
“செயற்கை நுண்ணறிவுடன் விவசாயத்தில் புதிய மாற்றத்திற்கு தயார்” – ரணில் விக்ரமசிங்க.
ரத்துபஸ் வழக்கில் முன்னாள் மேஜர் உட்பட 4 பேர் விடுதலை.
பற்றி எரிந்த பேருந்து – பயங்கர விபத்தில் 8 பக்தர்கள் உடல் கருகி உயிரிழப்பு!
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழக அரசு விளக்கம்!
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்! – உயிரிழந்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி.