ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயம் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு மாகாணத்துக்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்புப் பிரிவினர், பொலிஸார், மாவட்ட அரச அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்குப் பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.