சுவிஸ் காட்டில் மயங்கி கிடந்த 6 வயது சிறுமி மரணம்
சுவிட்சர்லாந்தில் குடும்ப விருந்து ஒன்றின் போது காணாமல் போன ஆறு வயது சிறுமி, காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக சுவிட்சர்லாந்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லுசேர்ண் பொலிசாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5:54 மணியளவில் (15:54 GMT) ரவோயர் பகுதியில் ஒரு குடும்ப விருந்தில் கலந்து கொண்டபோது சிறுமி காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.
பார்ட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 5:00 மணி முதல் யாரும் அவரைக் காணவில்லை.
“தேடுதலின் பின் கண்டு பிடிக்கப்பட்ட 6 வயதுடைய குழந்தையை ஏர்-கிளேசியர்ஸ் ஹெலிகாப்டர் மூலம் லொசேன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (CHUV)கொண்டு செல்லப்பட்ட பின், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்தார்” என்று வாலிஸ் காவல்துறை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநில போலீசார் (cantonal police), பல மீட்பு அமைப்புகள், விமானப்படை மற்றும் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இணைந்து, காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க பெரும் தேடுதலை மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, 9:20 மணியளவில், விழா நடந்த இடத்துக்கு அருகிலுள்ள காட்டில் மயக்கமடைந்த நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்து கன்டோனல் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.