அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்காத வடக்கு, கிழக்கு மக்களின் மீட்பர்களால் , 25 கோடி நஷ்டம்
விக்னேஸ்வரன், சுமந்திரன், செல்வராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சம்பந்தன் ஆகியோர் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை… வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் 25 கோடி மக்களுக்கு கிடைக்கவில்லை!
2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 கோடி ரூபா வடக்கு – கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படாத காரணத்தினால் ஒதுக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாணத்தின் அபிவிருத்திக்காக வருடாந்தம் ஐந்து கோடி ரூபாவை அதிகாரப்பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொள்வதோடு, கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான திட்டங்களை மதிப்பீடு செய்து சமர்ப்பிக்காத காரணத்தினால் இந்த ஐந்து உறுப்பினர்களும் அந்த பணத்தை இழந்துள்ளனர்.
இதன்படி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்கள் அரசாங்கத்திடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதில் எந்த அக்கறையும் இல்லாததால், அந்த மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்கள் அக்கறை காட்டுவதில்லை என யாழ்.பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.