வெளியானது எலோன் மஸ்க்கிற்கின் StarLink to Sri Lanka அறிவிப்பு
இந்த வருடத்தில் இருந்து Starlink இணைய வசதிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ஸ்டார்லிங்க் நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த வசதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த சேவை கிடைக்கும்.
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எலோன் மஸ்க்க்கும் இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.