கோவிலில் தரிசனமே செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள் – என்ன காரணம்?
பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பியுள்ளனர்.
உத்தரகாண்ட்டில் உள்ள பிரபல கோவில்கள் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
அங்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் காரணத்தால் கோவில்கள் குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இங்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
இது ‘சார்தாம்’ யாத்திரை என அழைக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான யாத்திரை, கடந்த 12ம் தேதி துவங்கியது. எனவே, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முடிவில், பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வரும்படியும், பதிவு செய்யாமல் வருவோருக்கு கோவில்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமும் 20,000 பேர் தரிசனம் செய்துவரும் நிலையில், பத்ரிநாத் கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், பதிவு செய்யாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும், பதிவு செய்யாத பக்தர்களை, பத்ரிநாத்துக்கு அழைத்து வந்த ஐந்து டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.