ஜனாதிபதி ரணில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் – டக்ளஸ் தேவானந்தா
ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர் போட்டியிடப்போவதாக இதுவரை அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்.
இதன்படி, முறையே நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன என்றார் அவர்.