ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெற்றி பெறுவாரா? பரபரப்பான தேர்தல் கருத்துக்கணிப்பு
அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தற்போது ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக மக்களவை தேர்தல் களம் கண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவில் நிறைய மாற்றங்கள் வந்தன. அதில், குறிப்பாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிகழ்வே பெரிய சமாச்சாரம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் உண்மையான அதிமுகவை ஒருங்கிணைத்து காட்ட போகிறேன் என் தொண்டர்கள் மீட்பு குழு என்பதையும் முன்னெடுத்துள்ளார்.
பதவி போட்டி தான் என்றாலும், ஓபிஎஸ் தரப்பில் வலுவான ஆட்கள் தற்போது யாரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தவர், பின்னர் பின்வாங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து விட படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆதரவை பெற்று, சுயேச்சை வேட்பாளராக பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார்.
அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய பலரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவரை போலவே, அத்தொகுதியில் மேலும் சில ஓபிஎஸ்’கள் தேர்தல் களம் கண்டனர். சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை என்றாலும், வெற்றி என்பதே குறிக்கோளாக இருக்கும். அப்படியிருக்க இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாக 2 நாட்களே உள்ள சூழலில், கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளது.
அதிமுகவையே எதிர்த்து களம் கண்டுள்ள ஓபிஎஸ், முக கூட்டணியில் மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ஆகியோரையும் எதிர்த்திருக்கிறார்.
தந்தி தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, திமுக கூட்டணி வேட்பாளர் இந்தியன் முஸ்லிம் லீக் சிட்டிங் எம்பி நவாஸ் கனியிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் 33 % வாக்குகளை பெறுவார் என தெரிவிக்கப்பட்டு, நவாஸ் கனி 35% வாக்குகளை பெற்று விடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.