பத்து ஆண்டு நல்லாட்சி தொடரும்: மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சாதனை புரிந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
“தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இந்திய அளவில் ஒரு வரலாற்றுச் சாதனை.
“மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், கடந்த பத்து ஆண்டுகால நல்லாட்சி தொடரும்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிக்காக கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொண்டர்களின் கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தமது பதிவில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தாம் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் பிரதமர் மோடி.