மோடியின் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாடாளுமன்றத்தில் அனேகமாக பெரும்பான்மையைக் கைப்பற்றும். ஆனால், கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்த மாபெரும் வெற்றியை அது நெருங்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் 2014ல் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. அக்கட்சி 2019லும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது..
அரசியல் கவனிப்பாளர்கள் கூறிய கருத்துகள் இதோ:
யஷ்வண்ட் தேஷ்முக், சிவோட்டர் அறநிறுவன நிறுவனர்
“பாஜகவும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. எங்கள் தரவுகளில் உள்ள அட்டவணைகளில் இருந்து முற்றிலும் விலகிய ஒரே ஒரு மாநிலம் மட்டுமே உள்ளது: உத்தரப் பிரதேசம்.
“பாஜகவின் சொந்த எண்ணிக்கையையும் அது குறைத்துவிட்டது, இந்த நேரத்தில் அக்கட்சியால் தனிப்பெரும்பான்மையை எட்ட முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.
“பாஜகவின் இரு கூட்டணிக் கட்சிகள் இப்போது மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன – சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும்.
ரஷீது கித்வாய், கண்காணிப்பு ஆய்வு அறநிறுவனம்
“நிறைய பொருளியல் விவகாரங்கள் இருந்தன என நினைக்கிறேன். கிராமப்புறப் பகுதிகளில் பாஜக மோசமாகச் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த விவகாரங்கள், பாஜகவுக்குப் பாதகமாக அமைந்தன. மோடியை அதிகம் சார்ந்திருந்தது பலன் தரவில்லை. மோடியைத் தோற்கடிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.
சந்தீப் சாஸ்திரி, தேசிய ஒருங்கிணைப்பாளர், லோக்நிதி
தொகுதிகளைக் கைப்பற்றுவதில் பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவு, மூன்று மாநிலங்களுடன் தொடர்புடையது – உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் அதன் தொடக்க நிகழ்வு பெரிய விவகாரமாக எழவில்லை. சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியால் உருவான கூட்டணி வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.