சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிக்கை (Video)
வெலி ஓயா பொலிஸ் நிலையத்தில் ஒருவர் , சிறுமியை தாக்கிய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும் சமீப நாட்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வந்தது. மேலும், அனைவரின் மனதையும் வேதனைப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோல்மலக்குடா என்ற பகுதியில் வைத்து சந்தேக நபரும் , சந்தேக நபரின் கள்ள மனைவிகளான இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களோடேயே இருந்த தாக்குதலுக்கு உள்ளான சிறுமியையும் போலீசார் மீட்டனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட உதவி பெறப்பட்டு , சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியின் சிக்னல் ஊடாக விசாரணைகள் மற்றும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
முனசிங்க கொடிகாரலாகே சமிந்த என்ற 45 வயதுடைய சந்தேகநபர் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பெண்களும் ஹம்சாவல எனும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் குறித்த சிறுமியின் 38 வயதுடைய தாயும், 47 வயதுடைய பெண்ணொருவரும் சந்தேகநபருடன் கைதுசெய்யப்பட்ட நிலையில், இவர்கள் மறைந்திருக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரும் கைதானார்கள்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், நீதிமன்றம் அனைவரையும் , இம்மாதம் 19 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது,
இவர்கள் தப்பிச் சென்ற ஆட்டோவும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
இச் சந்தேகநபரின் சொந்த மகனான , 20 வயது இளைஞன் இந்த தாக்குதலுக்கு ஆட்சேபம் தெரிவித்த ஒருவர், இந்த சிறுமி அடிக்கப்படுவதை பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் இவர்களை கைது செய்ய சாத்தியமாகியிருக்கிறது. இதனை தடுக்க பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க சில வழிமுறைகளை பின்பற்றிய அவர், சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்ததால், எதிர்காலத்தில் இந்த குற்றம் தொடர்ந்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே, அவருக்கு பொலிஸாரால் விசேட வெகுமதி பரிசு ஒன்றை வழங்க பொலிஸ் மா அதிபர் முன்மொழிந்துள்ளார்.
கிடைத்துள்ள தகவலின் படி குற்றம் தொடர்பாக , அபராதம் விதிக்கும் சாத்தியக்கூறுகளை கௌரவ நீதிமன்றம் பரிசீலிக்கும். மேலும், அந்த மூன்று பெண்களும் ஒரு குற்றம் நடக்க அனுமதித்தமை மற்றும் பாராமுகமாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற குற்றம் தொடர்பான தகவல்களை வழங்குவது சமூகத்தின் பொறுப்பாகும், மேலும் இதுபோன்ற தகவலை வெளிப்படுத்தும் பொறுப்பும் சமூகத்துக்கு உள்ளது.
மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குற்றம் நடப்பதைக் கண்டால், குற்றத்தைத் தடுக்கும் வகையில் செயல்பட எந்த ஒரு பொதுமகனுக்கும் உரிமை உண்டு. பின்னர் சந்தேக நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும், அப்போதுதான் சமுதாயத்தின் குடிமக்கள் குற்றத்தைத் தடுக்க பாடுபட முடியும், ஆனால் அவர்கள் சட்டத்திற்கு இணங்கக்கூடிய முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். குற்றவாளியாக கைது செய்ததற்காக அவரை அடிக்கவோ அல்லது சித்திரவதை செய்யவோ எந்த குடிமகனுக்கும் உரிமை இல்லை. காவல்துறை அதிகாரியிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ ஒப்படைப்பது குடிமகனின் பொறுப்பு.
சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கௌரவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுமி , சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி எந்த நிலையில் உள்ளார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார் பொலிஸ் ஊடக பேச்சாளர்.
இப்படியான சம்பவங்களை அறிந்தால் , உடனடியாக 119, 109, 011 2 444444 தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.