இரு சிறுவர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு சிறுவன் பலி!
ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் இன்று (05) பிற்பகல் இரண்டு சிறுவர்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் பதினைந்து வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17 வயது சிறுவன் ஒருவரே இந்தக் சிறுவனை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.