சஜித் – அனுர விவாதத்திற்கு அனுர தயார்… சஜித்திடமிருந்து பதில் இல்லை.

இன்று (06) இரவு 10 மணிக்கு சுயாதீன தொலைக்காட்சி சேவையினால் காலம் ஒதுக்கப்பட்டுள்ள விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தயார் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்துக்கு பின்னர் கட்சியின் தலைவர்களுக்கிடையிலான விவாதம் நடக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை இந்த விவாதங்களுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.