டி20 உலகக்கோப்பை கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ சுற்றில் கனடா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட கனடா அணி, அயர்லாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஐந்தாம் வரிசை வீரர் நிக்கோலஸ் கிரிட்டன் 35 பந்துகளின் 49 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். ஆறாம் வரிசையில் இறங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். இந்த இருவரின் அபாரமான ஆட்டத்தால் கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
அயர்லாந்து அணியின் கிரைக் யங் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பாரி மெக்கார்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மார்க் அடேர், கேரத் டெலானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 138 ரன்கள் என்ற எட்டக் கூடிய இலக்கை அயர்லாந்து சேஸிங் செய்தது. கனடா அணியை விட அயர்லாந்து அணிக்கு அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளது என்பதால் அந்த அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணி சீரான வரிசையில் விக்கெட்களை இழந்தது. 59 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது அயர்லாந்து அணி. அப்போது ஜோடி சேர்ந்த ஜார்ஜ் டாக்ரேல் மற்றும் மார்க் அடேர் இணைந்து ரன் சேர்த்தனர். ஆனால், அதற்கு முன் வந்த வீரர்கள் நிதானமாக ஆடி விக்கெட்களை இழந்து இருந்ததால் ஒவ்வொரு ஓவருக்கும் அதிக ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்த ஜோடி.
கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது அயர்ல அயர்லாந்து. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் மார்க் அடேர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து அணியால் 4 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதை எடுத்து இருபது அவர்களின் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து. கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவே கனடா அணியின் முதல் வெற்றி ஆகும்.