தடுப்பூசி பற்றிய வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய தகவல்கள் : பழ பானங்கள் தயாரிக்கும் இயந்திரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாம் !
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் இந்த மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வராமல், தனது சொந்த தொழிற்சாலையில் மருந்துகளை தயாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மற்றுமொரு தகவல் சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த வர்த்தகர், பழ பானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தியுள்ளார்.
முன்னதாக, இம்யூனோகுளோபுலின் போன்ற சிக்கலான மருந்தை தயாரிக்கும் மேம்பட்ட தொழிற்சாலை நாட்டில் இல்லை என்று பல தரப்பினரும் கூறினர்.
ஏனெனில் இது மிகவும் சிக்கலான உற்பத்தி செயல்முறையாகும்.
சர்ச்சைக்குரிய தொழிலதிபர் தனது தொழிற்சாலையில் இம்யூன் குளோபுலின் மருந்து மற்றும் புற்றுநோய் மருந்தான Rituximab ஆகியவற்றை தயாரித்துள்ளதாகவும், அவை தேவையான தரத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.