ஜனாதிபதி தேர்தல் ஒரு வருடம் தாமதம்.. ரணிலுக்கு மேலும் ஒரு வருடம்..
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே போதுமான சாத்தியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து ஆறு வருடங்களாக நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
19வது திருத்தச் சட்டத்தில் பொது வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறிலிருந்து ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டதால் மீண்டும் அதேபோன்று ஐந்திலிருந்து , ஆறாக அதிகரிக்க முடியும் என சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தால், அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு வேண்டி வரும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.