என் தந்தை வடக்கிற்கு சிறந்ததை செய்தார்.. 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில்தான் உள்ளது – நாமல் ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

சஜித் பிரேமதாசவும் , அனுரகுமார திஸாநாயக்கவும் வடக்கிற்குச் சென்று 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து , வடக்கு – கிழக்கை மீட்டு , தமிழ் மக்களுக்கு சுதந்தத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அவர்களுக்கு முதலமைச்சரை நியமிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட புலிப் பயங்கரவாதிகள் மட்டுப்படுத்தியிருந்தனர் . அவர்கள் முதலில் கேட்டது 13யை அல்ல தனிநாட்டை. 13வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

வடக்கில் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் ஆதாயங்களுக்காக ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுகிறார்கள். உண்மையில் தேவையான வடக்கின் அபிவிருத்தி பற்றி பேசாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

எனவே 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எவரும் சத்தம் போடாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வடக்கில் இந்த விளையாட்டை ஆடுவதால், வாக்குகளுக்காக மக்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள் என்றார் நாமல் ராஜபக்ஷ .

Leave A Reply

Your email address will not be published.