கிண்ணியாவில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சாவு!
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்றுப் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிண்ணியா, இடிமனையைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என்பவரே சாவடைந்துள்ளார்.
மேற்படி நபர், தனது தந்தையின் பண்ணைக்குச் சென்ற வேளையில் மறைந்திருந்த யானை தாக்கியுள்ளது.
இந்தப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குள் யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.