ஜனாதிபதி தேர்தலில் தோற்பார் என்பது தெளிவாக தெரிகிறது.. அதனால் தான் மக்கள் கருத்தை மாற்ற முயற்சிக்கிறார் – ஹரிணி அமரசூரிய

அரசாங்கம் என்ன முயற்சி செய்தாலும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த மக்களின் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் குலைக்கும் முயற்சி நடப்பதை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வரும் அறிக்கைகள் மற்றும் கருத்துகளை சமூகமயப்படுத்துவதில் இருந்து பார்க்க முடிகிறது.

அரசு தோற்க நேரிடும் என்பது அரசுக்கு தெரியும். அந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில் மக்கள் கருத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். மக்கள் இவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.