EURO 2024 தொடங்குவதற்குள் ஜெர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,400 பேர்
ஜெர்மனியில் EURO 2024 காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முந்திய ஒரு வாரத்தில் 1,400 பேர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்திருப்பதாக அந்நாட்டின் Bild பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
எல்லைப் பாதுகாப்பு வலுப்பட்டதால் சுமார் 1,000 பேர் உள்ளே வராமல் தடுக்கப்பட்டனர் என்று அந்த ஞாயிறு ஏடு கூறியது.
காற்பந்துப் போட்டி நடைபெறும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த தினமும் 22,000 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டென்மார்க் (Denmark), பிரான்ஸ் (France), பெல்ஜியம், (Belgium), நெதர்லந்து (Netherlands), லக்ஸம்பர்க் (Luxembourg) ஆகியவற்றுடன் இருக்கும் ஜெர்மனி எல்லையை மக்கள் சுதந்திரமாகக் கடக்க அனுமதி உண்டு.
ஆனால் காற்பந்துப் போட்டி முடிவடையும்வரை தற்காலிகக் கட்டுப்பாடு உள்ளது.
அங்கு விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் சோதிக்கப்பட்ட பின்னரே மக்கள் உள்ளே வர முடியும்.