நீதிபதியின் வீட்டிற்கு மின்சார திருட்டு / நீதிபதி இருந்தும் 20 கோடி ரூபா பெறுமதியான விஸ்கி போத்தல்கள் மாயம்

கல்கீசை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தில் இருந்து தற்காலிகமாக நீதவான் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தில் மின்சார விநியோகத்தில் பிரச்சினை ஒன்று ஏற்பட்ட போது, ​​அமைச்சின் மின் தொழில்நுட்பவியளாளர் அங்கு சென்ற போது, ​​ அனுமதியற்ற மின்சார விநியோகத்தினால் மின்சாரம் அவர் தாக்கிய போது , அதிஸ்ட்ட வசமாக அவர் உயிர் பிழைத்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

இலாபம் ஈட்டும் வகையில் அனுமதியற்ற மின்சார விநியோகம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடிநீர் இணைப்பும் முறைகேடாக இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஒருவர் இருக்கும் போதே, ​​20 கோடி ரூபா பெறுமதியான விஸ்கி போத்தல்கள் காணாமல் போயிருந்ததாகவும், சரியான திறப்பு மூலமே பெட்டகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.