கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதனால் இன்னும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாபுரம் பகுதிக்கு சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது. இதனிடையே கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததுதான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மெத்தனால் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முதலில் சென்னைக்கு மெத்தனால் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டு பின் வட மாவட்டங்களுக்கு மெத்தனால் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.