2024இல் உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனம் Qatar Airways

2024ஆம் ஆண்டுக்கான உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவன விருதை Qatar Airways தட்டிச்சென்றுள்ளது.

இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வந்துள்ளது.

அனைத்துலக ஆகாயப் போக்குவரத்துத் தரவரிசைப் பட்டியலை உருவாக்கும் நிறுவனமான Skytrax அந்த முடிவுகளைத் தெரிவித்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கும் Qatar Airwaysக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் Qatar Airways பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

இவ்வாண்டின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் Emirates நிறுவனம் உள்ளது.

ANA All Nippon Airways நான்காம் இடத்திலும் Cathay Pacific Airways ஐந்தாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.