கடன் வசதிகள் தேவைப்படும் தொழில்முனைவோர் தங்களது நட்டமடைந்த வணிகங்களை மீண்டும் தொடங்க ஒரு சலுகை காலம்.
நட்டமடைந்த தொழில்களை மீள ஆரம்பிக்க கடன் வசதிகள் தேவைப்படும் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தொழில் அமைச்சுக்கு தகவல்களை வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடன் தகவல் பணியகத்தால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்கள் தமது தகவல்களை தொழில் அமைச்சுக்கு வழங்குவதற்கு ஜூன் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவின் பணிப்புரைக்கு அமைய இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நிதி வசதிகள் தேவைப்படும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.