இலங்கையர்களுக்கு ரஷ்ய குடியுரிமை?
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கூலிப்படையில் சேர ரஷ்யாவுக்குச் சென்று காயமடைந்த இலங்கையர்களில் சிலர், இலங்கைக்குத் திரும்ப விரும்பவில்லை எனவும் , அவர்களுக்கு ரஷ்யாவின் குடியுரிமை கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தாரக பாலசூரிய நேற்று (29) கேகாலையில் பேசும்போது குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்,
“எங்களில் ஒரு குழு ரஷ்யாவுக்குச் சென்று ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆகியோருடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தியது. அங்கு 464 பேர் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 8 அரச அதிகாரிகள் இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு சென்றிருந்தனர்.