நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு!
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
40வது அதிகாரசபையான பொது பாதுகாப்பு சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.