“ரணில் மொட்டில் அங்கத்துவம் பெற்றால் பரிசீலிப்போம்” – சாகர காரியவசத்தின் கடும் அறிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் தொடர்பாக நாங்கள் எவரையும் தேர்வு செய்யவில்லை. சரியான நபர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படுவார். மொட்டு சின்னத்தின் கீழ் எமது கட்சி வேட்பாளரை நிறுத்துவோம்” என்றார்.

கேள்வி – ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஒரு வேட்பாளரை முன்னிறுத்துகிறது. அவரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி மொட்டில் அங்கத்துவம் பெற்றால் அது குறித்து பரிசீலிப்போம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.