பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடல் 2 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக ….! (Photos)

பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடல் இன்று புதன்கிழமை
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை
நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் புகழுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் கொழும்பு – பொரளையிலுள்ள ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

அன்னாரின் புகழுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், கட்சி உறுப்பினர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் புகழுடல் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9 மணி முதல் திருகோணமலையிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

Leave A Reply

Your email address will not be published.