உதயங்க வீரதுங்கவுக்கும் , மொட்டுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை – சாகர காரியவசம்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சி குறித்து அவர் கூறும் கருத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்றார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும், பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் களமிறங்குவார்கள் என உதயங்க வீரதுங்க தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும், வேட்பாளர் நிச்சயமாக பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.