மொட்டு ரணிலுடன் , வேறு வழியில்லை..? ஜனாதிபதி-நாமல் முக்கிய கலந்துரையாடலில்..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு. கட்சியின் கொள்கைக்கு இணங்கி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய வேட்பாளருக்கே வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.