அதுருகிரியவில் கொல்லப்பட்ட நயன (உபாலி தேரர்) கே சுஜீவாவின் மூன்றாவது கணவர்.
அதுருகிரியில் நேற்று முன்தினம் (9) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பிரபல பாடகர் கே சுஜீவாவும் ஒருவர். அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் கிளப் வசந்துடன் உயிரிழந்த மற்றைய நபர் கிளப் வசந்தின் மெய்க்காப்பாளர் என ஆரம்ப செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பாடகர் கே சுஜீவாவின் தற்போதைய கணவரான நயன வாசல விஜேசூரிய இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
52 வயதான பாடகி 37 வயதான நயன வாசலவை 2021 இல் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
கே.சுஜீவாவுடன் திருமணத்திற்கு முன்பு, அவர் ஒரு பிரபலமான பௌத்த தர்ம பேச்சாளரான தேரராக மற்றும் “கம்பஹா மஹாநாம தேரர் ” என்ற பௌத்த துறவியாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அழகான துறவற வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
கே.சுஜீவாவுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த அவர், அவரை திருமணம் செய்து கொள்ள துறவு வாழ்க்கையை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், கே.சுஜீவாவின் முதல் கணவர் சுனேத் கலும் மற்றும் இரண்டாவது கணவர் அஜித் முத்துக்குமரனாவுக்குப் பிறகு, சுஜீவா அல்லது அவரது மகள்கள் மூன்றாவது கணவரைப் பற்றிய புகைப்படம் அல்லது தகவல்களை பகிர்வதைத் தவிர்த்தனர், இதனால் அவர்களின் திருமணத்தைப் பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும்.
நயன வாசல கொலை நடந்த விழாவில் கலந்து கொண்டதுடன், அவரது அகால மரணம் காரணமாக, உபாலி தேரரது உயிர் பிரிந்ததில் வருத்தம் தெரிவிப்பதாக, அவருடன் விகாரையில் ஒன்றாக வாழ்ந்த நெருங்கிய நண்பரான தேரர் ஒருவர் , அவரது முகநூலில் அநியாயமான மரணம் என ஒரு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.
குறித்த குறிப்பு நிசலவில சதஹம் விகாரையின் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு உள்ளது.
“நூனும் , நீயும் ஒரே நாளில் துறவிகளானோம்..உபசம்பத ஒரே நாளில்..உனக்கும் எனக்கும் ஒரே வயசு..ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியாது என்று சொன்ன போது வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்று உன்னை துறவி ஆக்கினேன். நீ உபசம்பதத்தில் அமர்ந்தாய்.. என்னை விட உபதேசம் செய்வதில் நீ சிறந்தவன்..ஒரு கவிதையை வாசிக்கும் போது அந்த ஓசையில் மயங்காதவர் யார்? அன்றைய தினம் தர்ம மண்டபத்தில் உன் போதனைகளில் மயங்காதவர்கள் யார்?.. நீ நாளுக்கு நாள் பிரபலமடைந்து வரும்போது, உன் தவறுகளை திருத்திக் கொள்ளச் சொன்னபோது, உபதேசம் செய்யும் வழியில் சூத்ரங்களைக் கற்றுக் கொடுத்தேன். நீ என் மீது கோபம் கொண்டாய்.. அந்த பெண்ணால் உன் வாழ்க்கையில் இவ்வளவு அழிவு ஏற்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. சுஜீவா நீ இந்த சாபத்தில் இருந்து தப்ப முடியாது. நயன வாசுல என நீ என் மனதில் இல்லை. நீ எனக்கு அன்றும் மகாநாம.. இன்றும் மகாநாம.. என் சகோதரன் மகாநாம ஆத்மா சாந்தி பெறட்டும்.” – நான் உனக்கு எப்போதும் பாசம் காட்டிய ஞானதுசித்த
கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் மலர் நிலையத்திற்கும், நயன வாசுல விஜேசூரியவின் சடலம் கே.சுஜீவவின் புதல்விகளது பொறுப்பில் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாடகி கே சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.