மன்னாரின் பாதுகாப்பை பலப்படுத்தி விசேட சோதனைச் சாவடிகள் !
அதுருகிரியில் கிளப் வசந்த மற்றும் நயன வாசுல எதிரிசூரிய ஆகியோரை சுட்டுக் கொன்ற சந்தேக நபர்கள் மன்னார் வழியாக மீன்பிடி படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து, மன்னாரில் பல இடங்களில் பாதுகாப்புப் படையினர் விசேட சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் மன்னார் வழியாக நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கொழும்பில் இருந்து கிடைத்த உத்தரவின் பேரில் பல சிறப்பு கண்காணிப்பு சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாக மன்னாரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மன்னாரிலிருந்து கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகளில் மீன்பிடி அடையாள அட்டை இல்லாமல் பயணிப்பவர்களை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.