பகிடிவதை ஒழிப்பின் பொறுப்பு பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு – ஜனாதிபதி நடவடிக்கை
பகிடிவதையை பல்கலைக்கழகங்களில் இருந்து அகற்றும் பொறுப்பை உப வேந்தர்களிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டயர் ஒன்று விழுந்தமையினால் காயமடைந்த பல்கலைக்கழக மாணவரை நலம் விசாரிப்பதற்காக அவரது வீட்டிக்கு சென்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த மாணவர் மீது டயரை தள்ளியமை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட 4ம் வருட மாணவரொருவர் முதலாவது சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
மாத்தளையை சேர்ந்த குறித்த மாணவனை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட மஜிஸ்திரேட் மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.