பராக் ஒபாமாவும் , நான்சி பெலோசியும் பிடன் குறித்து கவலை.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் ஜோ பிடனின் 2024 பிரச்சாரம் குறித்து தனிப்பட்ட முறையில் ‘கவலை’ தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்புடனான சமீபத்திய பலவீனமான விவாதம் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி டிரம்ப் என தவறாக வாய் தவறி கூறிய பின்னர் , ஜனநாயகக் கட்சியினர் ஜனாதிபதி ஜோ பிடனின் வயது மற்றும் மோசமான பொருளாதார திட்டங்கள் குறித்து தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமருக்கு பிடனின் நம்பிக்கை இல்லாததாலும், ஹவுஸ் மைனாரிட்டி தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸுக்கு முக்கியமான செய்திகளை வழங்குவதற்கு பிடனுடன் போதுமான வலுவான உறவு இல்லாததாலும், கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு ஒபாமா அல்லது பெலோசியின் வழிகாட்டுதல் தேவை என்று கூறியுள்ளனர், மேலும் சில ஜனநாயகக் கட்சியினர் தேர்தலுக்கு முன், மேலும் சேதத்தை குறைக்க தெளிவாகவும் விரைவாகவும் முடிவு கூற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பிடனின் நெருங்கிய நண்பரான ஒபாமாவோ அல்லது பிடனின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் பெலோசியோ பிடனின் ஜனாதிபதி வேட்புமனு பற்றி பகிரங்கமாக எதுவும் குறிப்பிடவில்லை.

இதுவரை, ஜார்ஜ் குளூனி, இரண்டு ஹவுஸ் டெமாக்ராட்கள், ஓரிகானின் ஏர்ல் புளூமெனாயர் மற்றும் நியூயார்க்கின் பாட் ரியான் மற்றும் நியூயார்க் லெப்டினன்ட் கவர்னர் அன்டோனியோ டெல்கடோ பிடன் உட்பட பத்து ஜனநாயக சட்டமியற்றுபவர்கள் பிடனை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், நேற்று (12ம் தேதி) மிச்சிகனில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ‘வெளியேற வேண்டாம்’ என பிடனை நோக்கி பார்வையாளர்கள் கரவொலி எழுப்பியபோது, ​​’நான் எங்கும் செல்ல மாட்டேன், நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.