கிளப் வசந்தவின் இறுதி பயணம்.. உடலைப் பார்க்க பழகிய உயரதிகாரிகளோ, பணக்காரர்களோ, நடிகர்களோ இல்லை. (video)
அத்துருகிரியில் பாதாள துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கொல்லப்பட்ட கிளப் வசந்த என்றழைக்கப்படும் வசந்த சுரேந்திர பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை மயானத்தில் நடைபெற்றன.
கொழும்பில் உள்ள ஜயரத்னவில் , அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள போது, ஜயரத்ன உரிமையாளர்களுக்கு இரண்டு தடவைகள் வெளிநாடுகளில் இருந்து சடலத்தை அங்கு வைக்க வேண்டாம் என தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
அதன் காரணமாக ஜயரத்ன மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
வசந்த உயிருடன் இருக்கும் போது அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த பல உயர்தர பணக்கார வர்த்தகர்களோ , உயரதிகாரிகளோ, பணக்காரர்களோ, நடிகர்களோ கடைசிவரை அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.