பேலியகொடையில் நாறிய மீன் விற்பனை அதிகரிப்பு!
பேலியகொட மத்திய மீன் சந்தையில் கெட்டுப் போன மீன் விற்பனை அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு கண்டுபிடித்துள்ளது.
கடந்த மே மாதம் 17ஆம் திகதி பேலியகொட மத்திய மீன் சந்தை முகாமையாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் பாவனைக்கு எடுக்க முடியாத மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால், மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த முகாமைத்துவ அறக்கட்டளையின் தலைவி குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் அறிக்கைகளை கோர தீர்மானித்துள்ளார்.
பேலியகொடை மத்திய மீன் சந்தையில் 154 மொத்த வியாபாரக் கடைகளும் , 124 சில்லறை மீன் கடைகளும் உள்ளதாக பேலியகொடை மத்திய மீன் மொத்த விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறுகிறார்.
அப்புறப்படுத்தப்படும் அழுகிய மீன்களை சேகரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று இருப்பதாகவும், இது தொடர்பில் தொழிற்சங்க நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை ஒரு அறிக்கை கூட வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.