சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவை , கிராம மக்கள் தாக்கியதால் பிக்கு மருத்துவமனையில்….

தெஹிஅட்டகண்டி குடாகம இசிபதனாராம விகாரையில் வெசாக் தினத்தன்று 12 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்து, கோவிலின் சங்கவாச கட்டிடத்தில் பொக்கிஷங்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில், ஆலயத்திலிருந்து துரத்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவர்,நேற்று (14) பலவந்தமாக ஆலயத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டதாக தெஹிஅத்தகண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்குவுடன் வந்த சில குண்டர்கள் , கிராம மக்களோடு முரண்பட்ட போது , பிக்குவும் மற்றுமொருவரும் காயமடைந்தனர்.

தெஹியத்தகண்டிய புதிய மெதகம நகரில் கடந்த 8 ஆம் திகதி வெசாக் தினத்தன்று பிக்கு , கிராமத்தில் உள்ள பன்னிரெண்டு வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் குழுவொன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தியது.

இந்தச் பிக்கு , கிராமத்தில் மதுவுக்கு அடிமையான சிலருடன் சங்கவாசம் வைத்துள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரிவைச் சேர்ந்த பிக்குகளுக்கு அந்த விடயம் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பிக்குவை விகாரையை விட்டு வெளியேறியதாகவும் கிரமத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் இந்த பிக்குவை மீண்டும் விகாரையில் இருக்க விடுவது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட கிராமத்தவர்கள், இந்நிலைமையினால் பிக்குவை விகாரையில் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் நேற்று (14ம் திகதி) மாலை கிராமத்தின் பெரும்பான்மையினரின் வெறுப்புக்கு ஆளான பிக்கு மக்களால் தாக்கப்பட்டுள்ளார், அவருடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.