அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க சாவு
அம்பலாங்கொட கந்த மாவத்தை பகுதியில் இன்று (16) மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரபல கிரிக்கட் வீரரான 41 வயதான தம்மிக்க நிரோஷன் வீடொன்றின் முன்னால் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சுடப்பட்ட தம்மிக்க நிரோஷன், இலங்கையில் முதல்தர கிரிக்கெட் அணியான சிலாவ் மேரியன்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.அம்பலங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பாடசாலை கிரிக்கெட் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இவர் வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.