வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் குளிக்கும் இளம் பெண்ணை வீடியோ செய்ய போய் சிக்கினார்!
வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தனியார் ஆங்கில வகுப்பு நடத்தும் வீட்டின் குளியலறையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து இளம் பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் அடங்கிய விடுதி ஒன்றில் குறித்த விரிவுரையாளர் ஆங்கில வகுப்பு ஒன்றை நடத்திவருகிறார்.
சம்பவத்தன்று வகுப்பு நடத்தும் போது, அரசு ஊழியரான இளம் பெண் குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றுள்ளார்.அப்போது விரிவுரையாளர் வகுப்பை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று இளம் பெண் நிர்வாணமாக குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த பெண் குளியலறையின் ஜன்னல் வழியாக தெரிந்த மொபைல் போனை பார்த்து பயந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர், ஆங்கில விரிவுரையாளர் அந்து இடத்தை விட்டு ஓடியுள்ளார்.
பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் குளியலறைக்கு அருகில் நின்று வீடியோ எடுக்கும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.