22வது அரசியலமைப்பு திருத்தம் , ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில்..
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் “06 வருடங்களுக்கு மேல்” என்ற வார்த்தைக்கு பதிலாக “05 ஆண்டுகளுக்கு மேல்” என்ற வார்த்தையை இணைப்பதற்காக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்று (19) நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (18) வர்த்தமானியில் வெளியிடப்பட மாட்டாது என அறிவித்த போதும் ,அது ஜனாதிபதியினால் வர்த்தமானிவழியாக வெளியிடப்பட்டுள்ளது.